தேனி, திண்டுக்கல்லில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உயதகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
தேனி, திண்டுக்கல்லில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
Published on

திண்டுக்கல்:

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தேனி, பங்களாமேடு பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உயதகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். மேலும் தேனி, திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க திரளான தொண்டர்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com