ஆவின் பால் பொருட்கள் மாநிலம் முழுவதும் விற்பனை- அமைச்சர் மனோதங்கராஜ் ஆலோசனை

சென்னை மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும்.விற்பனைப் பிரிவு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆவின் பால் பொருட்கள் மாநிலம் முழுவதும் விற்பனை- அமைச்சர் மனோதங்கராஜ் ஆலோசனை
Published on

சென்னை:

ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆவின் விற்பனைப் பிரிவுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். மாவட்ட ஒன்றியங்களில் உற்பத்தி செய்யப்படும் பால் உபபொருட்களின் தேவையின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்த ஆலோசனை வழங்கினார். மேலும் சந்தையில் நுகர்வோர் விரும்பும் பொருட்கள் குறித்து கள ஆய்வு மேற் கொண்டு அறிக்கையை தயார் செய்திட அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பால்வளத் துறை இயக்குனர் டாக்டர் வினித் மற்றும் விற்பனைப் பிரிவு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com