11 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் 15 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.புதிதாக கைதான 4 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Fishermen
Published on: 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. அதனை தொடர்ந்த அவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் 15 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 11 மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

11 மீனவர்கள் 2-வது முறையாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதால் சிறை தண்டனை விதிப்பதாகவும் புதிதாக கைதான 4 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்வதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com