பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழ்நாட்டிற்கு பெருமைகளை தேடித்தர வாழ்த்துகள்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஒன்றிய அரசு ஆண்டுதோறும் பல உயரிய விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ளவர்களுக்கு என்னுடைய அன்பையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழ்நாட்டிற்கு பெருமைகளை தேடித்தர வாழ்த்துகள்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை:

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஒன்றிய அரசு ஆண்டுதோறும் பல உயரிய விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை தங்கை வைஷாலி, ஸ்குவாஷ் வீரர் தம்பி ஹரிந்தர் பால் சிங் சந்து மற்றும் திறமையான பல விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகளை உருவாக்கி வரும் செஸ் பயிற்றுநர் R.B.ரமேஷ், கபடி விளையாட்டிற்கான பயிற்றுநர் சகோதரி கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு என்னுடைய அன்பையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் மென்மேலும் பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழ்நாட்டிற்கு பெருமைகளை தேடித்தர எனது வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com