கோவை ஆஸ்பத்திரியில் அமைச்சர் மதிவேந்தனுக்கு சிகிச்சை

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளார்.அமைச்சரின் உடல் நிலையை டாக்டர்கள் காண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை ஆஸ்பத்திரியில் அமைச்சர் மதிவேந்தனுக்கு சிகிச்சை
Published on

கோவை:

தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன் (வயது 40). இவர் குடல் இறக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று கோவைக்கு வந்த அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் காண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சர் மதிவேந்தன் ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் உள்ள அறை எண் 103-ல் தங்கி உள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனை முடிவில் குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுமா அல்லது சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படுமா என்பது தெரிய வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com