மேட்டூர் அணை நீர்மட்டம் 108 அடியை தொட்டது

நீர்வரத்து கணிசமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியை தொட்டது. அணையில் தற்போது 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 108 அடியை தொட்டது
Published on

சேலம்:

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 20 ஆயிரத்து 255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 14 ஆயிரத்து 273 கனஅடியாக குறைந்தது.

நீர்வரத்து கணிசமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியை தொட்டது. தொடர்ந்து அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 2500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com