தேசிய இளைஞர் தினம் - கமல்ஹாசன் வாழ்த்து

எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும்.இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது.
தேசிய இளைஞர் தினம் - கமல்ஹாசன் வாழ்த்து
Published on

சென்னை:

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ந்தேதி தேசிய இளைஞர் நாள் என்றும் விவேகானந்தர் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும். இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது. நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com