ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்

எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு.போராட்டத்தின்போது வெயிலால் எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்
Published on

மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது வெயிலால் ஒரு மணி நேரம் நின்றபடி தொடர்ந்து பேசிய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணீர் கொடுத்து மேடையில் அதிமுகவினர் அமர வைத்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com