

பாலிவுட் இயக்குனர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள பார்பி திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த படத்தினை பிரபல படுத்துவதற்காக ஏற்கனவே அமெரிக்காவில் பார்பி பொம்மை போன்று வீடு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.
இது தவிர பல்வேறு நாடுகளிலும் பார்பி பொம்மை நிறத்தினாலான பொருட்களும் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் டெல்லியின் கமலா நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பார்பி பொம்மை நிறத்தை போன்று இளம் சிவப்பு நிறத்தில் பர்கர், பப்பில்கம் மில்க் ஷேக், இளம் சிவப்பு பாஸ்தா மற்றும் அழகான உண்ணக்கூடிய வகையில் இளம் சிவப்பு நிற ஷூ போன்ற உணவு வகைகள் தயாரிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.