

கடந்த ஆண்டு சென்னையில் போலீசார் கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 13 ஆயிரத்து 491 கஞ்சா வியாபாரிகள் சிக்கினர். 4141 கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. கடந்த ஆண்டில் 9906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 4 டன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாநில காவல் துறையில் ரவுடி வேட்டை நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 3949 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.