அக்னி பிரவேசத்துக்கு தயாராகும் அண்ணாமலை!

அண்ணாமலையின் நம்பிக்கையை டெல்லி மேலிடமும் நிராகரிக்கவில்லை.பேசப்படும் கட்சியாக மாறியிருப்பதை மறுப்பதற்கில்லை.
அக்னி பிரவேசத்துக்கு தயாராகும் அண்ணாமலை!
Published on

தமிழக அரசியலில் தனித்து நின்றும், சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்து பா.ஜனதா கையை சுட்டுக்கொண்ட வரலாறு உண்டு.

அதே நேரம் இந்தியாவில் பலமான கட்சியாக இருந்தும் எத்தனை காலம் தான் திராவிட கட்சிகளிடம் கையேந்தி நிற்பது? நம் தலைமையில் திராவிட கட்சிகள் துணையின்றி மக்களை சந்திப்போம் என்று துணிச்சலுடன் அண்ணாமலை களம் இறங்கி இருக்கிறார். அண்ணாமலையின் நம்பிக்கையை டெல்லி மேலிடமும் நிராகரிக்கவில்லை. தமிழ் நாட்டில் பா.ஜனதா முன்பு போல் இல்லை. பேசப்படும் கட்சியாக மாறியிருப்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தான் வாங்க.. சாதித்து காட்டுவோம் என்று சொந்த கட்சியினரை திரட்டுகிறார். ஆனால் முடியுமா என்ற தயக்கத்தில் பலரும் பின்வாங்குகிறார்கள்.

ஆனாலும் 'வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல்... எண்ணித் துணிந்தால் இங்கு நடக்காதது என்ன?... கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது?...' என்ற பாடலுக்கு ஏற்ப அக்னி பிரவேசத்துக்கு தயாராகி விட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com