முதலமைச்சர் விஜய்க்கு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?: பிரேமலதா விஜயகாந்த்

திமுக மற்றும் அதிமுக என யார் கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும், அது தொடர வேண்டும்.
Premalatha Vijayakanth
காவிரி உரிமைக்காக முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்.
Published on

தமிழக சட்டப்பேரவையில் பிரேமலதா

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்,

மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடரப்பட வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாக உள்ளது.

திமுக மற்றும் அதிமுக என யார் கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும், அது தொடர வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாக உள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களுக்காக தொடர வேண்டும்.

விருத்தாச்சலத்தை மாவட்டமாக பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தேன்.

மழையில் நனையும் நெல் மூட்டைகள்

விருத்தாச்சலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மழை காலங்களில் திறந்தவெளியில் உள்ள நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளது. மழை பெய்யும் காலம் என்பதால் நெல்லை சேமிக்க கிடங்குகள் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து தன்னிறைவு பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டும். இப்பொழுது மழைக்காலமாக இருப்பதால் அனைத்து ஏரிகளையும் தூர்வாறி, மழைநீரை சேமிக்க வேண்டும்.

ஏரிகளை தூர்வார கோரிக்கை

நீருக்காக யாரிடமும் கையேந்தாத நிலைக்கு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.

காவிரி நமது உரிமை, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மேகதாது, காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் என்ன?

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல முதல்வர் விஜய் முடிவெடுத்தது சரிதான். டி.கே.சிவக்குமாரும், விஜயும் இருமாநிலத்தின் புதிய முதல்வர்கள், பேசினால் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்?

முதல்வரின் பின்னால் தமிழகம் நிற்கிறது

முதல்வர் கர்நாடகா செல்லும்போது அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது என்கிறார்கள், அப்படி நடக்க நாங்கள் விட மாட்டோம்.

முதலமைச்சர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?

விருகம்பாக்கம் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடை நீண்ட காலமாக மூடாமல் உள்ளது, அதை அமைச்சர்கள் தலையிட்டு மூடுவதற்கான நடவடிகையில் ஈடுபட வேண்டும்” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com