கோடைகால மின்சாரத் தேவை: குறுகிய கால மின்சார கொள்முதலுக்கு டெண்டர்- அமைச்சர் நிர்மல் குமார்

ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு.
Minister Nirmal kumar
Published on: 

கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சார கொள்முதலுக்கு டெண்டர் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம்,"யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 ரூபாய் முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சாரக் கொள்முதல் டெண்டர் திறப்பு!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட டெண்டர் திறக்கப்பட்டுள்ளது.

யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 ரூபாய் முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது ...

Jan - ஒரு யூனிட் ரூ.13

Feb - ஒரு யூனிட் ரூ.9.50

Mar - ஒரு யூனிட் ரூ.10

Apr - ஒரு யூனிட் ரூ.10

May - ஒரு யூனிட் ரூ.9.95

June - ஒரு யூனிட் ரூ.13

இந்த குறைந்தபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் 2014 ம் ஆண்டுக்கு பிறகு விரைவில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர் கோரப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X