

தமிழக சட்டசபை இன்று தொடங்கிய நிலையில், அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
மலேசியாவில் பயின்று வரும் மாணவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்தார். மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு வன்னி அரசு பதில் அளித்தார்.
அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகை கிடைக்கவில்லை என மலேசியாவில் பயிலும் தமிழக மாணவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தாண்டு உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.
மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பது தவறான, அரசியல் உள்நோக்கத்துடனான குற்றச்சாட்டு.
மாணவரின் குற்றச்சாட்டை ஆராயாமல் அரசியல் கட்சிகள் உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டுகின்றன.
இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் ரூ.135 கோடி வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை.
மற்ற மாணவர்களுக்கு வந்துவிட்டது, தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.
திமுக ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார், குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை.
கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.
தான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் திமுக வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்த்தியுள்ளேன்.
திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு. தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு.
தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது
இவ்வாறு அவர் கூறினார்.