85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்..ரூ.58,214 கோடி முதலீடுகள்- தவெக அரசின் 2-வது முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்கம்

புதிய முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களின் செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் இந்த செயலாக்க மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Minister Keethana
Published on: 
Summary

முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 58,214 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 65,786 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், தவெக அரசின் இரண்டாவது 'வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாடு 2026' சென்னை கோவளத்தில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் சுமார் ரூ. 58,214 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 65,786 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, போஸ்கோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது தொழில் விரிவாக்கத்தை மேற்கொள்ள முன்வந்துள்ளன. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 250 கோடி முதலீட்டில் புதிய திட்டத்தைத் தொடங்க போஸ்கோ நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது, இதன் மூலம் 200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.

6 மாத கால முதலீட்டு சாதனைகள் வெளியீடு

புதிய முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களின் செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் இந்த செயலாக்க மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 6 மாத கால ஆட்சியில் தவெக அரசு தமிழகத்திற்கு ஈர்த்துள்ள ஒட்டுமொத்த தொழில் முதலீடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்த முழுமையான விவரங்கள் இந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ளன.

X