

தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி எல்காட் மேலாண் இயக்குநராக இருந்த கே.பி.கார்த்திகேயன், நகர பஞ்சாயத்துகள் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நகர பஞ்சாயத்துகள் இயக்குநராக இருந்த பிரியங்கா, மின் ஆளுகை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அயலகப் பணியில் இருந்து திரும்பியுள்ள பி. விஷ்ணு சந்திரன், எல்காட் புதிய மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.