

தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 9ம் தேதி திங்கள்கிழமை பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தாண்டு தீபாவளி நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், மறுநாளும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடிவிட்டு ஊர் திரும்பும் மக்களின் வசதிக்காக அடுத்த நாளை பொது விடுமுறையாக அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தீபாவளி பண்டிகை 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள். பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
இவ்வாண்டு, 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடி திரும்புவதற்கு ஏதுவாக, 09.11.2026 திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
2. அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 28.11.2026 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
3. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது, செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(ஆளுநரின் ஆணைப்படி)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.