
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தபால் வாக்கு எண்ணிக்கை : கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை
தபால் வாக்கு எண்ணிக்கை : பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை
தபால் வாக்கு எண்ணிக்கை : சேலம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை
தபால் வாக்கு எண்ணிக்கை : சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
த.வெ.க. தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை தொகுதியில் த.வெ.க. முன்னிலை
தபால் வாக்கு எண்ணிக்கை : கொளத்தூர், ஆர்கே நகர், சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. முன்னிலை
தபால் வாக்கு எண்ணிக்கை : திருச்சி கிழக்கு தொகுதியில் 5 செல்லாத ஓட்டுகள்
தபால் வாக்கு எண்ணிக்கை : திருச்சி கிழக்கில் த.வெ.க. தலைவர் விஜய் பின்னடைவு
ஏற்காட்டில் வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
மதுரை மேற்கில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ முன்னிலை
குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை
கோவை தெற்கில் செந்தில் பாலாஜி முன்னிலை
ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க. முன்னிலை
திருச்சி கிழக்கில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை
திருச்சி மேற்கில் த.வெ.க. முன்னிலை- கே.என்.நேரு பின்னடைவு
தபால் வாக்கு எண்ணிக்கை : பூந்தமல்லி தொகுதியில் தி.மு.க. முன்னிலை
TN Assembly Election Result : ஈவிஎம் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
சென்னை அண்ணாநகர் தொகுதியில் கட்சி முகவர்கள் வாக்குவாதம்- பரபரப்பு
TN Assembly Election Result : திமுக-24, அதிமுக-4, தவெக-3 தொகுதிகளில் முன்னிலை
மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை முன்னிலை
ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பின்னடைவு
கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பின்னடைவு
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: கொளத்தூர் தொகுதியில் 471 வாக்குகள் பெற்று த.வெ.க. முன்னிலை- மு.க.ஸ்டாலின் பின்னடைவு
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: விழுப்புரம் தொகுதியில் அதிமுக முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை
தி.நகர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் த.வெ.க. முன்னிலை- செல்வப்பெருந்தகை பின்னடைவு
கலசப்பாக்கத்தில் அதிமுக முன்னிலை
மயிலாப்பூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் முன்னிலை- தமிழிசை பின்னடைவு
காரைக்குடியில் த.வெ.க. வேட்பாளர் பிரபு முன்னிலை- சீமான் பின்னடைவு
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சரவணன் முன்னிலை
கந்தர்வகோட்டையில் த.வெ.க. வேட்பாளர் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி பின்னடைவு- த.வெ.க. 295 வாக்குகள் பெற்று முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: செங்கல்பட்டில் த.வெ.க. முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: திண்டுக்கல்லில் த.வெ.க. முன்னிலை- திண்டுக்கல் சீனிவாசன் பின்னடைவு
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: தூத்துக்குடியில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீநாத் முன்னிலை- கீதா ஜீவன் பின்னடைவு
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: விக்கிரவாண்டியில் பா.ம.க. முன்னிலை
ராயபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் முன்னிலை- ஜெயக்குமார் பின்னடைவு
TN Assembly Election Result : தற்போதைய நிலவரப்படி த.வெ.க.-45, திமுக- 42, அதிமுக 33 தொகுதிகளில் முன்னிலை
மதுரை மத்திய தொகுதியில் த.வெ.க வேட்பாளர் முஸ்தபா முன்னிலை- பிடிஆர், சுந்தர் சி பின்னடைவு
ராதாபுரம் தொகுதியில் த.வெ.க. முன்னிலை- தி.மு.க. பின்னடைவு
வேளச்சேரி, திருப்போரூர், மதுரை மேற்கு தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: திருத்துறைப்பூண்டி தொகுதியில் சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து முன்னிலை
திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பின்னடைவு- த.வெ.க. முன்னிலை
பொள்ளாச்சி, பல்லடம், தஞ்சாவூர் தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை
திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பின்னடைவு- த.வெ.க. முன்னிலை
திண்டுக்கல் தொகுதியில் 2-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை: த.வெ.க முன்னிலை
மன்னார்குடியில் டிஆர்பி ராஜா பின்னடைவு
வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா முன்னிலை- திமுக வேட்பாளர் பின்னடைவு
ஆலந்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் முன்னிலை- திமுக வேட்பாளர் தாமோ அன்பரசன் பின்னடைவு
அம்பத்தூர், மாதவரம் தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை
திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசு பின்னடைவு
திருப்பரங்குன்றத்தில் த.வெ.க. வேட்பாளர் நிர்மல்குமார் முன்னிலை
தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை
துறைமுகம் தொகுதியில் த.வெ.க. முன்னிலை- சேகர்பாபு பின்னடைவு
தற்போதைய நிலவரப்படி சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு
TN Assembly Election Results: தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை.
காட்பாடி தொகுதியில் துரைமுருகன் பின்னடைவு
தற்போதைய நிலவரப்படி சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளிலும் த.வெ.க. முன்னிலை
சாத்தூரில் திமுக முன்னிலை- நயினார் நாகேந்திரன் பின்னடைவு
விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா பின்னடைவு- த.வெ.க. முன்னிலை
கொளத்தூர் தொகுதியில் 3-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் வரும் நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவு
நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை
ராதாபுரம் தொகுதியில் 4-வது சுற்று முடிவிலும் அப்பாவு பின்னடைவு- த.வெ.க. முன்னிலை
TN Assembly Election Results: தற்போதைய நிலவரப்படி த.வெ.க-103, அ.தி.மு.க.-80, தி.மு.க.-48 தொகுதிகளில் முன்னிலை
வாக்கு எண்ணிக்கையில் த.வெ.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் விஜய் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் தொகுதியில் 3-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 400 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி முன்னிலை
தூத்துக்குடியில் 2-ம் சுற்று முடிவில் 3ஆயிரம் வாக்குகளில் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீநாத் முன்னிலை- கீதா ஜீவன் தொடர்ந்து பின்னடைவு
சைதாப்பேட்டையில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் மா.சுப்பிரமணியன் பின்னடைவு
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை- விஜயதரணி பின்னடைவு
திருப்பூரில் 5 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை
கொளத்தூர் தொகுதியில் 4-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு- த.வெ.க. முன்னிலை
காங்கேயத்தில் த.வெ.க. முன்னிலை- அதிமுக 2ம் இடம்
காலை 10.30 மணி நிலவரப்படி 234 தொகுதிகளில் த.வெ.க. 102, அ.தி.மு.க. கூட்டணி 81, தி.மு.க.கூட்டணி 51 ஆகிய இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இதுவரை யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
அவினாசியில் பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தொடர்ந்து பின்னடைவு
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போதுவரை த.வெ.க. 33.9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
தற்போதைய நிலவரப்படி திருவண்ணாமலையில் அனைத்து தொகுதிகளிலும் 3-ம் இடத்திற்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது.
கரூரில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை
நாமக்கலில் 3 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை
கொளத்தூரில் 5-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு
காலை 10.50 மணி நிலவரப்படி தவெக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் திமுக கூட்டணி 51 இடங்களில் முன்னிலையுடன் 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை கொண்டாட்டங்களுக்காக கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் அமைக்கப்பட்ட பந்தல் அகற்றப்பட்டு வேனில் ஏற்றி திரும்பக் கொண்டு செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அங்கிருந்த திமுக தொண்டர் ஒருவர், அது நேற்று இரவு நடந்த நிகழ்வொன்றுக்காக அமைக்கப்பட்ட ஏற்பாடுகள் என்றும் அவற்றுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் த.வெ.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை அடுத்து விஜயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி.
திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முன்னிலை.
அருப்புக்கோட்டையில் த.வெ.க. முன்னிலை- KKSSR ராமச்சந்திரன் பின்னடைவு
செய்யூர் தொகுதியில் த.வெ.க. முன்னிலை
பெரம்பூர் தொகுதியில் 4வது சுற்று முடிவில் தவெக தலைவர் விஜய் 9,138 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
கொளத்தூரில் 6-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு- த.வெ.க. முன்னிலை
விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா தொடர்ந்து பின்னடைவு
ஊட்டியில் பா.ஜ.க. வேட்பாளர் போஜராஜன் முன்னிலை
எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலை
காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவு
உத்திரமேரூர் தொகுதியில் 6 சுற்று முடிவில் தவெக வேட்பாளர் முனிரத்தினம் தொடர்ந்து முன்னிலை.
தவெக - 24753, திமுக - 16264, பாமக - 14494 , நாதக - 1694. தவெக 8489 வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தொடர்ந்து பின்னடைவு
10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக விருதுநகரைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு
கோபி தொகுதியில் 6-வது சுற்று முடிவில் செங்கோட்டையன் முன்னிலை
சிவகங்கை தொகுதியில் கருணாஸ் பின்னடைவு
காரைக்குடியில் த.வெ.க. தொடர்ந்து முன்னிலை- சீமான் பின்னடைவு
துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு முன்னிலை
கொளத்தூர் தொகுதியில் 7-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு.
போடி தொகுதியில் 22 வாக்குகள் வித்தியாசத்தில் ஓபிஎஸ் முன்னிலை
ராதாபுரத்தில் 10வது சுற்றிலும் தவெக முன்னிலை - அப்பாவு பின்னடைவு
கே.வி.குப்பம் தொகுதியில் தவெக முன்னிலை - ஜெகன்மூர்த்தி பின்னடைவு
திருவிக நகரில் தவெக முன்னிலை - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பின்னடைவு
மதுரை மேற்கில் செல்லூர் ராஜூ தொடர்ந்து பின்னடைவு - தவெக முன்னிலை
நாங்குநேரியில் 10வது சுற்றிலும் தவெக முன்னிலை
கொளத்தூர் தொகுதியில் 8-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு.
விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை.
நாங்குநேரி தொகுதியில் 10-வது சுற்றிலும் த.வெ.க. முன்னிலை
கொளத்தூரில் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பின்னடைவு
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளில் இதுவரை 1.5 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. 50 லட்சம் வாக்குகளை த.வெ.க. பெற்றுள்ளது.
12 மணி நிலவரப்படி த.வெ.க.-109, அ.தி.மு.க.-65, தி.மு.க. 60 இடங்களில் முன்னிலை
தொடர்ந்து முன்னிலை வகிக்கும் த.வெ.க... உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் விஜயின் குடும்பத்தினர்...
Thalapathy #Vijay Family 🥰 #TVKVijay #ThalapathyVijay pic.twitter.com/sfsTBHGtG4
— SkyC Media (@SkyCMedia) May 4, 2026
மதுரை கிழக்கில் 10-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி பின்னடைவு
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 10வது சுற்று முடிவில் 9,105 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலை
எடப்பாடி தொகுதியில் 7-வது சுற்று முடிவில் எடப்பாடி பழனிசாமி 23,837 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக கோலோச்சிக் கொண்டிருந்த விஜய், தவெக கட்சியை ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் அரசியல் களத்திலும் வலுவாக கால் பதித்துள்ளார். முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு வந்துள்ளார் விஜய்.
மேலூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி
கோவை தெற்கு தொகுதியில் 6-வது சுற்று முடிவில் 979 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலை.
100 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தவெக... பனையூர் அலுவலகத்தில் த.வெ.க.வினர் குவியத் தொடங்கியுள்ளதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் பின்னடைவு- த.வெ.க. முன்னிலை
அ.தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. 5 தொகுதிகளிலும் முன்னிலை.
கொளத்தூரில் 11-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு- த.வெ.க. தொடர்ந்து முன்னிலை
அரவக்குறிச்சி தொகுதியில் 493 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. முன்னிலை
சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் ஆலோசனை
த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு நடிகை திரிஷா வருகை.
த.வெ.க.வுடன் சேர்ந்திருந்தால் காங்கிரசுக்கு பெரும் வெற்றி கிடைத்திருக்கும்- பிரவீன் சக்கரவர்த்தி
ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை.
பனையூர் த.வெ.க. அலுவலகத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் சஞ்சய் குமார் வருகை
1 மணி நிலவரப்படி த.வெ.க. 110, தி.மு.க.-62, அ.தி.மு.க. -61 ஆகிய இடங்களில் முன்னிலை
சென்னை பனையூரில் தவெக அலுவலகம் முன்பு பேரிகார்டுகள் வைக்கப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு
த.வெ.க. 110-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் பனையூர் த.வெ.க. அலுவலகத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் சஞ்சய்குமார் வருகை. விஜய் வீடு, பனையூர் த.வெ.க. அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் பனையூர் அலுவலகம் செல்ல உள்ளார்.
தேர்தல் முடிவுகள் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. த.வெ.க. 100 சதவீதம் வெற்றி பெறும் என 100 சதவீதம் விஜய் நம்பினார்- விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்
விருதுநகர் தொகுதியில் 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பளர் செல்வம் 1809 வாக்குள் முன்னிலை - தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பின்னடைவு
வாணியம்பாடி தொகுதியில் 13வது சுற்று சுற்றில் 14370 வாக்குகள் வித்தியாசத்தில் IUML வேட்பாளர் முன்னிலை
பெரம்பூர் தொகுதியில் 8-வது சுற்று முடிவில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை.
கூட்டணி இல்லாவிட்டாலும் தேர்தலை சந்திக்கும் தைரியம் விஜயிடம் இருந்தது- எஸ்.ஏ.சந்திரசேகர்
உதகையில் முன்னிலையில் இருந்த பா.ஜ.க. வேட்பாளர் பின்னடைவு- 12வது சுற்று முடிவில் த.வெ.க. முன்னிலை
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் த.வெ.க. 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் முதல் தேர்தலிலேயே த.வெ.க. சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது:- வாழ்த்துகள் விஜய் அண்ணா. இது மிக பிரம்மாண்டமானது. மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. இதற்கு முன் எப்போதும் இல்லை, இனிமேலும் இருக்காது என்று கூறியுள்ளார்.
Congrats @TVKVijayHQ na . This is huge . And a historical victory 🔥 never before never after 🔥 @actorvijay
— G.V.Prakash Kumar (@gvprakash) May 4, 2026
வெற்றி சான்றிதழ் பெற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய். வெற்றி சான்றிதழை பெற்றபின் அடையாறில் உள்ள பெற்றோரை சந்தித்து ஆசி பெற உள்ளார்.
மதுரை மத்தியில் த.வெ.க. வேட்பாளர் முஸ்தபா 16,013 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
நடிகை வரலட்சுமி சரத்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒரு விரல் புரட்சி.. விசில் போடு..!!!-
woohooooooo… !!! மக்கள் தங்கள் தீர்ப்பை அளித்துவிட்டார்கள்.. பல தசாப்தங்களாக எத்தனையோ பேர் முயன்று பார்த்தார்கள்.. ஆனால் மக்கள் விரும்பினால் அதிகாரம் அவர்களிடமே இருக்கிறது என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். நம் தமிழர்களின் வாழ்வில் மாற்றத்தையும் செழிப்பையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.. வாழ்த்துகள்..!!!! என கூறியுள்ளார்.
Oru Viral Puratchi.. Whistle Podu..!!! @actorvijay woohooooooo… !!! The people have spoken.. so many have tried for decades.. but you have proved that if the people want the power is theirs..looking forward to change and prosperity of our tamilians.. congratulationssss..!!!!… pic.twitter.com/fgleEVqjX1
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) May 4, 2026
ஆட்சியமைக்க தயாராகும் த.வெ.க.- மூத்த நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை
சோளிங்கரில் பாமக முன்னிலையில் இருந்த நிலையில், 7-வது சுற்று முடிவில் 3882 வாக்குகள் அதிகம் பெற்று த.வெ.க. முன்னிலை
முன்னிலையில் இருந்த நாங்குநேரி, கடலூர் தொகுதிகளில் காங்கிரஸ் பின்னடைவு- த.வெ.க. முன்னிலை
கொளத்தூர் தொகுதியில் 14-வது சுற்றின் முடிவில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு- 7730 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் முன்னிலை
பெரும்பான்மையான இடங்களில் த.வெ.க. முன்னிலை வகிக்கும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி எம்பி. கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் அமைதியான முறையில் Reformasi, Aragalaya, Arab Spring, July Uprising, and Jana Andolan III போன்ற புரட்சி நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Tamil Nadu has had its peaceful
— Karti P Chidambaram (@KartiPC) May 4, 2026
Reformasi, Aragalaya, Arab Spring, July Uprising, and Jana Andolan III. moment!
தாம்பரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சரத்குமார் வெற்றி
கூடலூரில் தி.மு.க. வேட்பாளர் திராவிடமணி வெற்றி
தஞ்சையில் த.வெ.க. வேட்பாளர் விஜய் சரவணன் வெற்றி
த.வெ.க. தலைவர் விஜய்க்கு கருப்பு திரைப்பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி கூறியிருப்பதாவது:-
Wow..!!! This is HISTORIC…!!!
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…!
வாழ்த்துகள் விஜய் சார் மற்றும் நமது அருமையான மாநிலமான தமிழக மக்களுக்கு ..!!! என்று கூறியுள்ளார்.
Wow..!!! This is HISTORIC…!!!🔥🔥🔥
— RJ Balaji (@RJ_Balaji) May 4, 2026
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…!💥💥💥
Congratulations Vijay sir and to the people of our wonderful state Tamil nadu ..!!! ❤️🔥❤️🔥❤️🔥
த.வெ.க. தலைவர் விஜய் இல்லத்தில் இருந்து புறப்படும் போது Thumbs Up காட்டிய நடிகை திரிஷா.
#WATCH | Tamil Nadu: Actor Trisha Krishnan leaves from the residence of TVK chief and actor Vijay, in Chennai.
— ANI (@ANI) May 4, 2026
TVK is currently leading in 110 seats of the total 234 in the state. pic.twitter.com/332dL4OiIp
13வது சுற்றின் முடிவில் திருச்சி கிழக்கு தொகுதியில் 20,058 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலை.
கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் ஜீவா எக்ஸ் தள பக்கத்தில் விசில் அடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Blastu..Blastu..💥 pic.twitter.com/3x9MRSAK57
— Jiiva (@JiivaOfficial) May 4, 2026
சென்னை அண்ணாநகர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ராம்குமார் வெற்றி
தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் உள்ள 69 தொகுதிகளில் 55-ல் த.வெ.க முன்னிலை
தமிழக சட்டசபை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட த.வெ.க. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 1 கோடி வாக்குகளை பெற்றுள்ளது.
கிணத்துக்கடவு தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் வெற்றி
அரக்கோணம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வெற்றி
கே.வி.குப்பம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் தென்றல்குமார் வெற்றி
திருவாரூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி
போடிநாயக்கனூரில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
த.வெ.க. தலைவர் விஜய்க்கு நடிகை காஜல் அகர்வால் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுளள் பதிவில்,
“நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி” - இன்று, மக்கள் இந்த வார்த்தைகளை முழுமையான உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிரொலித்துள்ளனர்.
இந்த அற்புதமான மற்றும் மகத்தான வெற்றிக்கு விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இந்தத் தருணம், உங்கள் தொலைநோக்குப் பார்வைக்கும், உங்கள் விடாமுயற்சிக்கும், மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத அன்புக்கும் ஒரு உண்மையான சான்றாகத் திகழ்கிறது.
தமிழக மக்கள் தங்கள் குரலைப் பதிவு செய்துள்ளனர். அது உரக்க, தெளிவாக, மிகுந்த பெருமையுடன் ஒலித்துள்ளது. இது வெறும் வெற்றியல்ல; கோடிக்கணக்கான மக்களுடனான ஆழமான, வலிமையான பிணைப்பின் ஒரு கொண்டாட்டமாகும்.
இந்த ஊக்கமளிக்கும் புதிய அத்தியாயத்தில் நீங்கள் அடியெடுத்து வைக்கும் வேளையில், உங்களுக்குப் பெரும் வலிமையும் வெற்றியும் கிட்ட வாழ்த்துகிறேன். பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மாற்றத்தை நீங்கள் கொண்டு வருவீர்களாக!
இந்தச் சிறப்பான சாதனைக்காக மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
“Naan oru thadava sonna, nooru thadava sonna maari”
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) May 4, 2026
and today, the people have echoed it back with absolute conviction.
Heartiest congratulations to @actorvijay on this spectacular and resounding victory! This moment is a true testament to your vision, your perseverance, and… pic.twitter.com/labiTRQWHJ
தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவனை வீழ்த்தி த.வெ.க.வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி.
கொளத்தூர் தொகுதியில் 4,371 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு- த.வெ.க. வேட்பாளர் முன்னிலை
விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி விஜயபாஸ்கர் வெற்றி
சேந்தமங்கலம் தொகுதியில் தவெக வேட்பாளர் சந்திரசேகரன் சுமார் 1500 வாக்குகள் வித்யாசத்தில்வெற்றி
சிவகாசி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் கீர்த்தனா 15,072 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வெங்கடரமணன் வெற்றி
ராதாபுரம் தொகுதியில் அப்பாவு தோல்வி- த.வெ.க. வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் வெற்றி
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பின்னடைவு- த.வெ.க. வேட்பாளர் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் வெற்றி
திருப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி
திரு.வி.க.நகர் தொகுதியில் த.வெ.க. வெற்றி- பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தோல்வி
சேலம் மேற்கு தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் லட்சுமணன் வெற்றி
அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 10,010 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருவாரூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் 17,777 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ராயப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தோல்வி- த.வெ.க. வேட்பாளர் தாமு வெற்றி
கந்தர்வகோட்டை தொகுதி தவெக வேட்பாளர் சுப்பிரமணியன் 12,663 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றுள்ளார் .
முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற விஜய் சாருக்கு வாழ்த்துகள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றி
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி
உத்திரமேரூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் முனிரத்தினம் 15ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபு 22ஆவது சுற்றின் முடிவில் 38,481 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை- 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சீமான்
சைதாப்பேட்டை தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தோல்வி- த.வெ.க. வேட்பாளர் முன்னிலை
திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் சுமார் 10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
சென்னையில் தி.நகர், எழும்பூர் தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி
மதுரவாயல் தொகுதியில் தவெக வேட்பாளர் ரேவந்த் சரண் 56ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்லசுவாமி வெற்றி
அரியலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ் ராஜேந்திரன் 17,842 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன் தோல்வி- தவெக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி
பவானிசாகர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் தமிழ்செல்வி வெற்றி
சேலம் ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரன் 13,939 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
காட்பாடி தொகுதியில் த.வெ.க- அதிமுக இடையே கடும் போட்டி- 3ம் இடத்திற்குச் சென்ற துரைமுருகன்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தோல்வி- 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் வெற்றி
முசிறி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் 17,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
துறைமுகம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சேகர்பாபு வெற்றி
காஞ்சிபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் ரஞ்சித் குமார் சுமார் 8,800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நடிகர் ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வாழ்த்துகள், என் நண்பா விஜய். இன்று நீ உண்மையிலேயே வரலாறு படைத்திருக்கிறாய். உன் மகிழ்ச்சிக்காக நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Congratulations, my Nanba @actorvijay You’ve truly made history today. I always pray for your happiness ✨ pic.twitter.com/oW1a4ie4OQ
— Raghava Lawrence (@offl_Lawrence) May 4, 2026
செய்யாறு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் 21,081 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
விஜய் அண்ணா, அதிகாரம் என்பது வழங்கப்படக்கூடியது... ஆனால் மரியாதை என்பது சம்பாதிக்கப்பட வேண்டியது; நீங்கள் இவ்விரண்டையும் ஒருங்கே பெற்றிருக்கும் பாக்கியசாலி. இது வெறும் வெற்றியல்ல, நம்பிக்கையால் முத்திரையிடப்பட்ட ஒரு புரட்சி. நாங்கள் எப்போதும் உங்கள் பக்கமே இருக்கிறோம் அண்ணா.
சில நாட்களுக்கு முன்பு நாம் சந்தித்தபோது நீங்கள் கூறிய, "கவலைப்படாதேப்பா, நல்லதே நடக்கும்" என்ற வார்த்தைகள் தான் எனக்கும் என் குடும்பத்திற்கும் நீங்கள் வெற்றிகொண்ட நாளாக அமைந்தது.
முன்னேறிச் செல்லுங்கள் அண்ணா... எதிர்காலம் ஏற்கனவே உங்கள் பக்கம் சாய்ந்துவிட்டது. என்றென்றும் உங்கள் மீது நிபந்தனையற்ற அன்பு .
@actorvijay na, power can be given.. but respect is earned, and you’re blessed with both. This is not just a victory, it is a revolution sealed with trust. We are always with you na.
— Ravi Mohan (@iam_RaviMohan) May 4, 2026
Your words from our last meeting a few days ago, “Worry panadhe pa, nalladhe nadakkum” was the…
அறந்தாங்கி தொகுதியில் தவெக வேட்பாளர் முகமது பர்வாஸ் 10,602 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் வெற்றி
திருமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேடபட்டி மணிமாறன் வெற்றி- அதிமுக வேட்பாளர் ஆர்பி உதயகுமார் தோல்வி
ராஜபாளையம் தொகுதி தவெக வேட்பாளர் ஜெகதீஸ்வர் 10,768 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளர் ரகுபதி வெற்றி
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தவெக வேட்பாளர் அன்னை சரவணன் 1,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவின் இளங்கோ 18,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அரியலூரில் அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா சுமார் 16ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நடிகர் சதீஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தொகுதி…. சின்னம்…. வேட்பாளர்….
அனைத்தையும் தாண்டி வென்றது விஜய் என்ற ஒற்றை முகம்...
வென்றது ஜனநாயகம்...
வென்றார் ஜனநாயகன்...
Always love u #CMVijay sir... என்று கூறியுள்ளார்.
தொகுதி…. சின்னம்…. வேட்பாளர்….
— Sathish (@actorsathish) May 4, 2026
அனைத்தையும் தாண்டி வென்றது #விஜய் என்ற ஒற்றை முகம் 😍😍😍
வென்றது ஜனநாயகம் 😍
வென்றார் ஜனநாயகன் ❤️
Always love u #CMVijay sir 😘😍🤗@TVKVijayHQ @actorvijay pic.twitter.com/dxJjZxB8Ek
ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி வெற்றி
நீலாங்கரையில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் க.மாரிமுத்து வெற்றி
உத்திரமேரூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் முனிரத்தினம் வெற்றி
மதுரை வடக்கு தொகுதியில் த.வெ.க.வின் கல்லணை 18,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கிருஷ்ணகிரி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் முகுந்தன் வெற்றி
கடலூரில் தவெக வேட்பாளர் ராஜ்குமார் 14659 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நாகையில் ம.ஜ.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா 9739 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபு சுமார் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயராமன் தோல்வி- திமுக வேட்பாளர் நித்தியானந்தன் வெற்றி
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி- சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றார்
தமிழக அரசியலில் மிகச் சிறப்பானதொரு அறிமுகத்தைப் பெற்றதற்காக, தவெக மற்றும் விஜய் அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ள நற்பணிகளைச் செவ்வனே நிறைவேற்ற, எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் துணையாக இருப்பாராக என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
— K.Annamalai (@annamalai_k) May 4, 2026
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!…
பென்னாகரம் தொகுதியில் தவெக வேட்பாளர் கஜேந்திரன் 3,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளர் திலீப் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மயிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் வெற்றி
வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 7521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ராணிப்பேட்டை தொகுதி தவெக வேட்பாளர் தாஹிரா 5872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி- திமுக வேட்பாளர் காந்தி தோல்வி
ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வெற்றி
ஆற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
விஜய் அண்ணனுக்கு இந்த மாபெரும் வெற்றிக்காக என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். மக்கள் சேவையில் மேலும் உயர்ந்து, எண்ணற்ற சாதனைகள் படைக்க அண்ணனுக்கும் அவரது முழு அணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
விஜய் அண்ணனுக்கு இந்த மாபெரும் வெற்றிக்காக என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 💐 @actorvijay @TVKVijayHQ
— Actor Soori (@sooriofficial) May 4, 2026
மக்கள் சேவையில் மேலும் உயர்ந்து, எண்ணற்ற சாதனைகள் படைக்க அண்ணனுக்கும் அவரது முழு அணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏👍🤝💐💐💐
மின்சார வெற்றிக்கு வாழ்த்துகள்- இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
மின்சார வெற்றிக்கு என் வாழ்த்துகள் 🔥
— K.S.Ravikumar (@ksravikumardir) May 4, 2026
Many congratulations on the electrifying victory ! @TVKVijayHQ @actorvijay pic.twitter.com/LfLEpP6Rhr
மன்னராட்சி தூக்கி எறியப்பட்ட நாள், ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி- ஆதவ் அர்ஜூனா
திருச்சி கிழக்கு தொகுதியிலும் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி- போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றி பெற்றுள்ளார்.
எழும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் ராஜ்மோகன் 10,804 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை தவெக பெற்றுள்ளது. ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள தவெக 109 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
வேளச்சேரி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வெற்றி
ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் மெய்யநாதன் 12,905 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
வெற்றி சான்றிதழ் பெற நீலாங்கரை இல்லத்தில் இருந்து லயோலா கல்லூரிக்கு செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்.
கடையநல்லூர் தொகுதியில் மதிமுக வேட்பாளர் டி.எம்.ராஜேந்திரன் வெற்றி
கவுண்டம் பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் வெற்றி
விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி
திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் சுமார் 6ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக வேட்பாளர் அருள் விக்னேஷ் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மடத்துக்குளம் தொகுதியில் திமுகவின் ஜெயராமன் 15,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நிலக்கோட்டை தொகுதி தவெக வேட்பாளர் அய்யனார் வெற்றி
திருச்செங்கோடு தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் ராஜ் 26ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மதுரை கிழக்கில் தவெகவின் கார்த்திகேயன் வெற்றி- திமுக அமைச்சர் மூர்த்தி தோல்வி
பரமக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கதிரவன் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் வெற்றி
ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.மகாராஜன் வெற்றி
ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் 17,979 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மொடக்குறிச்சி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சண்முகன் வெற்றி
திருவிடைமருதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் வெற்றி
பல்லடம் தொகுதியில் தவெக வேட்பாளர் ராம்குமார் வெற்றி
பெருந்துறையில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 10,023 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அணைக்கட்டு தொகுதியில் அதிமுகவேட்பாளர் வேலழகன் சுமார் 6,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணன் 4,168 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளர் இளையராஜா 5364 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
குடியாத்தம் தொகுதி தவெக வேட்பாளர் சிந்து 7.140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
மதுரை சோழவந்தான் தொகுதியில் தவெக வேட்பாளர் கருப்பையா 2678 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
குன்னம் தொகுதியில் அமைச்சர் சிவசங்கர் வெற்றி
திருவாடானை தொகுதியில் தவெக வேட்பாளர் ராஜூ வெற்றி
கம்பம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா வெற்றி
நடிகர் விஜய் ஆண்டனி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
உங்கள் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் விஜய் சார் என்று கூறியுள்ளார்.
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
— vijayantony (@vijayantony) May 4, 2026
மெய்வருத்தக் கூலி தரும்.
உங்கள் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் @actorvijay sir😊 @TVKVijayHQ
ஈரோடு மேற்கு தொகுதி த.வெ.க. வேட்பாளர் ஆனந்த் மோகன் 22815 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தோல்வி
திருக்கோவிலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி தோல்வி
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற த.வெ.க வேட்பாளர் வெற்றி சான்றிதழை பெற்றார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்க உள்ளார்- புஸ்சி ஆனந்த்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி
குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 5396 வாக்குகள் பெற்று வெற்றி.
முதுகுளத்தூர் தொகுதியில் திமுகவின் ராஜகண்ணப்பன் 15ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
துறையூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வெற்றி
ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் உஷாராணி வெற்றி
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இந்த வெற்றி உறுதுணையாக இருக்கும் என நான் நம்புகிறேன்- த.வெ.க. தலைவர் விஜய்க்கு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வாழ்த்து
இந்தியாவே வியக்கும் அளவிற்கு முதல் தேர்தல் களத்திலேயே வெற்றி வாகை சூடி இருக்கிறார் தவெக தலைவர் விஜய் - செங்கோட்டையன்
திருவெறும்பூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் தோல்வி- த.வெ.க. வேட்பாளர் வெற்றி
நடிகை மீனா எக்ஸ் தள பதிவு,
வாழ்த்துகள் விஜய்,
உங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, பல உண்மைகளை உரக்கச் சொல்கிறது.
உங்கள் வாழ்வின் இந்தப் புதிய அத்தியாயத்திற்கு, மேலும் பலம் சேரட்டும் என்று கூறியுள்ளார்.
Congratulations to @actorvijay 💐
— Meena (@ActressMeena_) May 4, 2026
The faith people have in you speaks volumes
More power to you for this next chapter ✨#Meena pic.twitter.com/lgqkcfOWym
பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜஹான் வெற்றி
அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தோல்வி- தவெக வேட்பாளர் வெற்றி
பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் வெற்றி
விருகம்பாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வெற்றி
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வெற்றி
மணப்பாறை தொகுதி தவெக வேட்பாளர் கதிரவன் வெற்றி
ஆலந்தூர் தொகுதியில் தா.மோ.அன்பரசன் தோல்வி- த.வெ.க. வேட்பாளர் வெற்றி
சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
— Suriya Sivakumar (@Suriya_offl) May 4, 2026
பொன்னேரி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் எம்.எஸ்.ரவி வெற்றி
த.வெ.க. தலைவர் விஜய்க்கு நடிகை நயன்தாரா வாழ்த்து
விஜய் சாருக்கு வாழ்த்துகள். இன்று நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். இது பலவற்றின் தொடக்கம் மட்டுமே புரட்சி என்று கூறியுள்ளார்.
Congratulations to Vijay sir 💐you made history today👍. This is just the beginning of many😇 #revolution @TVKVijayHQ
— Nayanthara✨ (@NayantharaU) May 4, 2026
வெற்றி சான்றிதழை பெற புறப்பட்டார் விஜய்- வழியெங்கும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்
#WATCH | Tamil Nadu | TVK chief and actor Vijay leaves from his residence in Chennai to meet his father
— ANI (@ANI) May 4, 2026
His party, TVK is leading on 109 seats of the total 234 in the state. pic.twitter.com/AbcDAy4GGx
ஆர்.கே.நகர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வெற்றி
பெரம்பலூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சிவக்குமார் வெற்றி
சென்னை தலைமைச் செயலகத்தில் அறைகளை காலி செய்யும் அமைச்சர்கள்.
மடத்துக்குளம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் வெற்றி
பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் NDA-வை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றிகள். மக்களின் பிரச்சினைகளைக் களைவதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
சிறப்பான தேர்தல் செயல்பாட்டை வெளிப்படுத்திய TVK-விற்கு எங்களது வாழ்த்துகள்.
தமிழகத்தின் முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது அனைத்து முயற்சிகளையும் முழுமையாக மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் வெற்றி
த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் தோல்வி- தி.மு.க. வெற்றி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார் ராகுல் காந்தி.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார் என்று கூறியுள்ளார்.
ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 4, 2026
த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து பா.ம.க. கட்சியின் தலைவர் முடிவு செய்வார்- சவுமியா அன்புமணி
வெற்றி வாகை சூடிய மகனுக்காக வீட்டு வாசலில் காத்திருந்த தந்தை- விஜயை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த எஸ்.ஏ. சந்திரசேகர். வீட்டு பால்கனியில் இருந்து தொண்டர்களை உற்சாகப்படுத்திய த.வெ.க. தலைவர் விஜய்.
#WATCH | Tamil Nadu | TVK chief Vijay arrives at his parents' residence in Chennai pic.twitter.com/Of3def4Bys
— ANI (@ANI) May 4, 2026
இந்த வரலாற்று வெற்றிக்கு நல்வாழ்த்துகள் விஜய் சார். நல்லதே நடக்கும்- நடிகர் பிரதீப் ரங்கநாதன்
‘காமராஜர் தோற்றார், மு.க.ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது.
அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம்; வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்’
போடிநாயக்கனூர் தொகுதியின் திமுக வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் வெற்றி.
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என நடிகர் விஜய்க்கு சிம்பு வாழ்த்து.
தவெக தலைவர் விஜய்க்கு, நடிகர் அஜித்குமார் தொலைபேசி மூலம் வாழ்த்து
தனிப்பெரும்பான்மை எட்டப்படாத சூழ்நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் பனையூரில் நாளை ஆலோசனை.
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நாளை சென்னை வருகிறார்.
‘தமிழ்நாடு மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்’
பெரம்பூரில் வெற்றிப் பெற்றதற்கான சான்றைப் பெற்றார் விஜய். அவர் படித்த அதே லயோலா கல்லூரியில் சான்றிதழை பெற்றார்.
இளைஞர்களின் எழுச்சியை தவெகவின் வெற்றி பிரதிபலிக்கிறது. அரசியலில் இளைஞர்களின் குரலை யாராலும் புறக்கணிக்க முடியாது.
விஜய்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டும் செல்லும் சிறந்த தலைவராக விஜய் வரவேண்டும் என ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து.
‘மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்’. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி !” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்பா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்.
"எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று குளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். - எடப்பாடி பழனிசாமி
‘நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்’ என நடிகர் ரஜினிகாந்த் பதிவு.
"களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும், அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் விஜய் அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்." என தனுஷ் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் தேசிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி வாழ்த்து
“இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் தோல்வி மனதை பிசைகிறது.
அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய்க்கு இசையமைப்பாளர் மற்றும் பாடகர் அனிருத் ரவிச்சந்தர் வாழ்த்து.
த.வெ.க. தலைவர் விஜய்-க்கு இயக்குநர் பா ரஞ்சித் வாழ்த்து
ஜோசப் விஜய் என்னும் நான்…!
— M.Sasikumar (@SasikumarDir) May 4, 2026
தைரியத்திற்கு கிடைத்த வெற்றி.
எளியோர் பலர் வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. வளமான ஆட்சியை நிறுவுங்கள்.
வாழ்த்துகள் 💪🏿@TVKVijayHQ #TVK #TVKVijay #2026 pic.twitter.com/nxs5RSB3to
சட்டமன்றத் தேர்தல் 2026-இல் விருத்தாச்சலம் தொகுதியில் கிடைத்த இந்த மகத்தான வெற்றி, எங்கள் அன்பு கேப்டன் அவர்களுக்கும், எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) May 4, 2026
இந்த வெற்றிக்குப் பிறகு, கேப்டன் ஆலயத்திற்கு வந்து சிறப்பு பூஜை செய்து, அவரின் ஆசீர்வாதத்தை… pic.twitter.com/oMWdDPpg3W
த.வெ.க. தலைவர் விஜயின் நீலாங்கரை வீட்டின் முன் குவிந்த தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள்
#WATCH | Chennai, Tamil Nadu: TVK supporters gather outside the residence of TVK Chief & winning TVK candidate from Perambur Assembly constituency, Vijay, in Neelankarai. pic.twitter.com/Dz1YAoMqKX
— ANI (@ANI) May 4, 2026
தொடர்ந்து மூன்றாவது முறையாக திருச்சி மேற்குத் தொகுதி வெற்றி வேட்பாளராக என்னை தேர்ந்தெடுத்த எனது அன்பிற்கினிய திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
— K.N.NEHRU (@KN_NEHRU) May 4, 2026
உங்களில் ஒருவனாக என்றும் உங்களின் தேவைகளை பூர்த்தி… pic.twitter.com/G0L6PizI6G
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களும், தெலுங்கு நாட்டில் என் தந்தையும், தெலுங்கு தேசத்தின் மூத்த தலைவருமான என்.டி.ஆர் அவர்களும், ஒரு நடிகர் மனது வைத்தால் வரலாற்றை மீண்டும் எழுத முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். அந்த வெற்றியை மீண்டும் நினைவுகூர்ந்த சகோதரர் விஜய்க்கு எனது வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமையில் மட்டுமே ஒரு புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும்" என்று தெரிவித்துள்ளார்.