செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: தமிழக டிஜிபி விளக்கம்

ஒரு தரமான புலனாய்வு மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது.
DGP Mahesh kumar agarwal
Published on: 

சென்னையில் தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, செஞ்சி சிறுமி மாயமான வழக்கின் தற்போதைய நிலை குறித்துத் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ஒரு கோணத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் ஒரு தரமான புலனாய்வு மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. சிபிசிஐடி காவல்துறையின் பல்வேறு சிறப்புப் பிரிவுகள் ஒன்றாக இணைந்து இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.

வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, காவல்துறையின் மூத்த உயர் அதிகாரிகள் நேரடியாகக் களமிறங்கி விசாரணையை நடத்தி வருகின்றனர். மிக விரைவில் இந்த வழக்கில் நல்ல முடிவு எட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X