திங்கட்கிழமை டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய் - பிரதமர் மோடியுடன் சந்திப்பு?

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
Tamil Nadu CM Vijay to meet PM Modi in Delhi on Monday
Published on: 
Summary

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வரும் திங்கட்கிழமை பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

மேலும் கர்நாடகாவில் 5,400 ஏக்கர் நிலப்பரப்பில் மேகதாது அணையை கட்டுவதற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் வனத்துறையிடம் இருந்து ஒப்புதல் வந்தவுடன், மேகதாது அணை கட்டப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சிவகுமாரின் நடவடிக்கைக்கு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்காத சூழலில், அனுமதியை மீறி அணையை கட்ட கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

முன்னதாக மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை திங்கட்கிழமை, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியுடன் தமிழக முதலமைச்சர் விவாதிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

X