

கடந்த மாதம் சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் தான் வளர்த்து வந்த ஆடு, கோழி,புறாக்களை நாய்கள் கடித்து வருவதாக 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விஷம் வைத்து கொன்றதாக ஐ.டி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம் அடுத்த சேலையூர் ஹாரிங்டன் சாலையில் நேற்று இரவு 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் வாயில் ரத்தம் வழிந்த படி அடுத்தடுத்து இறந்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சேலையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் இறந்து போன நாய்களின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புகேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த மாதம் சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் தான் வளர்த்து வந்த ஆடு, கோழி,புறாக்களை நாய்கள் கடித்து வருவதாக 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விஷம் வைத்து கொன்றதாக ஐ.டி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் அதே பாணியில் நாய்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் சேலையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.