வி.எஸ்.பாபு மரணத்தில் சதி? போலீசில் புகார்!

இதே தேவராஜன்தான் வி.எஸ்.பாபுவின் மருத்துவ அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.
வி.எஸ்.பாபு மரணத்தில் சதி? போலீசில் புகார்!
Published on: 

கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தேவராஜன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செம்பியம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எழுத்தரான இவர்தான், வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ரிட் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு இன்று உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, வி.எஸ்.பாபுவின் மரணத்தின் பின்னணியில் ஏதேனும் சதிச் செயல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்து, காவல்துறையில் இன்று ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

மேலும், வி.எஸ்.பாபுவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் தேவராஜன் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

X