பென்னாத்தூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி அருகே புதர் மண்டிக் கிடப்பதால் மாணவர்கள் அவதி

சூழலைத் சாதகமாகப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் அப்பகுதியில் புகுந்து மது அருந்துவது மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.
ஆதிதிராவிடர் நலப்பள்ளியை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கும் காட்சி
ஆதிதிராவிடர் நலப்பள்ளியை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கும் காட்சி
Published on: 
Summary

புதர்கள் மண்டிக் கிடப்பதால் அங்கு விஷப் பாம்புகள் மற்றும் தேள் உள்ளிட்ட நச்சுப் பூச்சிகள் அடிக்கடி பள்ளியின் வளாகத்திற்கும் குடியிருப்புப் பகுதிக்கும் வந்து செல்கின்றன.

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக குடிநீர் வசதிகள் இன்றியும், பள்ளி வளாகம் முறையான பராமரிப்பின்றி ஆபத்தான் சூழலிலும் இயங்கி வருகின்றது.

இந்த பகுதியில் பள்ளி, கோவில் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இங்கு வரும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள், அதேபோல் அய்யப்பன் சாமிக்கு மாலை அணிந்து செல்பவர்கள் அந்த பகுதியில் தங்கி சமைத்து சாப்பிட்டு செல்கின்றனர்.

பழுதான போர்வெல்

இந்த நிலையில் வருபவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் கை பம்ப் போர்வெல் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பெரிதும் உதவிகரமாக இருந்த இந்த போர்வெல், தற்போது பராமரிப்பு இன்றி பழுதடைந்து பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றி உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காகக் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த போர்வெலைச் சீரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகமோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகளோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசியல் பிரமுகர்கள்

இதுகுறித்து உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கூட பலமுறை எழுத்துப்பூர்வமாக மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை எந்தவித பலனும் இல்லாதது பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விஷ பூச்சிகள்

இந்த பிரச்சினை ஒருபுற மிருக்க, மறுபுறம் ஆதிதிரா விடர் நலப்பள்ளியைச் சுற்றி பாதுகாப்பு இல்லாத வகையில் பெரிய செடிகளும், காடுகள் போல் புதர்களும் மண்டி வளர்ந்து கிடக்கின்றன. இந்தச் சூழலைத் சாதகமாகப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் அப்பகுதியில் புகுந்து மது அருந்துவது மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.

மேலும், புதர்கள் மண்டிக் கிடப்பதால் அங்கு விஷப் பாம்புகள் மற்றும் தேள் உள்ளிட்ட நச்சுப் பூச்சிகள் அடிக்கடி பள்ளியின் வளாகத்திற்கும் குடியிருப்புப் பகுதிக்கும் வந்து செல்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகமும், பென்னாத்தூர் பேரூராட்சி அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, பழுதடைந்த கை பம்ப் போர்வெலை சீரமைத்துத் தருவதோடு, பள்ளியில் சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

X