எண்ணூரில் கடலில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி

எண்ணூர் பாலம் அருகே அஜய் உடல் கரை ஒதுங்கியது. எண்ணூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எண்ணூரில் கடலில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
Published on: 

திருவொற்றியூர் அருகே எர்ணாவூர், பாரதியார் நகரை சேர்ந்தவர் கவியரசு. இவரது மகன் அஜய்(வயது 20), ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்தவர் சஞ்சய். நண்பர்களான இருவரும் கவரப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் அஜய், சஞ்சய் மற்றும் உடன் படிக்கும் கல்லூரி நண்பர்கள் 6 பேருடன் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரைக்கு வந்தனர்.

படகு

பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் முகத்து வாரா ஆற்றின் கரையின் எதிர்ப்புறம் சென்று அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய நண்பர்கள் அஜய், சஞ்சய் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் சஞ்சய்யை மட்டும் மயங்கிய நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அஜய் கடலில் மூழ்கி மாயமானார்.

போலீசார்

தகவல் அறந்ததும் எண்ணூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடலில் மூழ்கிய அஜயை தேடி வந்தனர். இந்த நிலையில் எண்ணூர் பாலம் அருகே அஜய் உடல் கரை ஒதுங்கியது. எண்ணூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com