அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்வீக கிராமத்தில் சிறப்பு பூஜை

கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தாவின் பூர்வீகம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம்.மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்வீக கிராமத்தில் சிறப்பு பூஜை
Published on

தஞ்சாவூர்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இன்று அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது. கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவருடைய தாய்வழி தாத்தாவின் பூர்வீகம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம் ஆகும்.

இந்தநிலையில் கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டி, துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் அவரை வாழ்த்தி கிராமம் முழுவதும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் சிலர், இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

இதேபோல் மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com