

சைதாப்பேட்டை கூட்டுறவு விற்பனை அங்காடி மைய வளாகத்தில் அமைச்சர் காந்திராஜ் ரூ.200 வழங்கப்படும் சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனையை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் 200 ரூபாய்க்கு சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை இன்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி செங்குன்றத்தில் உள்ள சைதாப்பேட்டை கூட்டுறவு விற்பனை அங்காடி மைய வளாகத்தில் அமைச்சர் காந்திராஜ் ரூ.200 வழங்கப்படும் சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனையை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்பு மளிகை தொகுப்பில் 250 கிராம் கடலை பருப்பு, 250 கிராம் பாசிப்பருப்பு, 100 கிராம் மிளகாய், 150 கிராம் தனியா, 150 கிராம் பூண்டு, 250 கிராம் புளி, 100 கிராம் கடுகு, 100 கிராம் உடைத்த உளுந்தம் பருப்பு, 50 கிராம் சீரகம், 50 கிராம் சோம்பு ஆகிய மளிகைப் பொருட்கள் உள்ளது.
இது இன்று முதல் அனைத்து கூட்டுறவு விற்பனை மையங்களிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் திருவள்ளூர் கலெக்டர் கவிதா, மாதவரம் எம்.எல்.ஏ.,பிரபு, கூட்டுறவு துறை செயலாளர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.