

மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) 22 மற்றும் 23-ந் தேதி விடுமுறை நாட்களையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 890 பஸ்களும் 22-ந்தேதி சனிக்கிழமை 820 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 110 பேருந்துகளும் 22-ந்தேதி 110 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் விடப்படுகிறது.
மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக 465 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாளை வெள்ளிக்கிழமை பயணம் செய்வதற்கு 18,762 பேரும், சனிக்கிழமை பயணத்திற்கு 10,461 பேரும் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய 17,678 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் டி.என்.எஸ்.டி.சி. மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணத்தை தொடரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.