தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில் சேவை: இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது

வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
மின்சார ரெயில்
Published on: 
Summary

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு, வெளியூர் பயணிகளின் நெரிசலை குறைக்க தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இன்று மற்றும் நாளை இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் பயணிகளின் வசதிக்காக நேரத்தை துல்லியமாக பின்பற்றி இயக்கப்படும்.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை யொட்டி வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் செல்கிறார்கள்.

சிறப்பு மின்சார ரெயில்கள்

அரசு பஸ்கள், அனைத்து ரெயில்கள் நிரம்பி வழிகின்றன. வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படுகின்ற 2 மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மாலை 6.4 4 மணிக்கு புறப்படும் இந்த மின்சார ரெயில் தாம்பரத்திற்கு 7.44 மணிக்கு சென்று கூடுவாஞ்சேரிக்கு 8.10 மணிக்கு சென்றடைகிறது.

இதே போல இரவு 7.10 மணிக்கு கடற்கரையில் புறப்பட்டு 8.10 மணிக்கு தாம்பரம் வந்து 8.30 மணிக்கு கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு ரெயில் சென்றடைகிறது.

மேலும் தாம்பரம்- கூடுவாஞ்சேரி இடையே 2 பயணிகள் சிறப்பு இயக்கப்படுகிறது. கூடுவாஞ்சேரியில் இரவு 8.18 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு தாம்பரம் வந்து சேர்கிறது. மற்றொரு சிறப்பு ரெயில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு 9.10 மணிக்கு தாம்பரம் வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com