

அரசு விடுமுறை நாட்களில் தடையை மீறி வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறை தொடர்ந்து திங்கள், செவ்வாயில் பண்டிகை வந்ததால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
இந்நிலையில், அரசு விடுமுறை நாட்களில் தடையை மீறி வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அரசு பொது விடுமுறை மற்றும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களில் நேரடி, இணையவழி சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை நாட்களில் தடையை மீறி வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தனியார் சுயநிதி மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எந்த வகுப்புகளும் நடத்தக்கூடாது. விதிமீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.