

ஆற்றில் மீன்கள் செத்து கிடந்தது தொடர்பாக 5 இடங்களில் ஆய்வு நடத்தினோம். ஆய்வு செய்ததில் 2 இடங்களில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது கண்டறியப்பட்டது என்றார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, சட்டத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாத்தில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை அளிக்க உள்ளனர்.
முன்னதாக, எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிமுகம் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி முதலில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆலை கழிவு ஆற்றில் கலப்பதால் நீர் நிறம் மாறியுள்ளது, மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது நடவடிக்கை தேவை என கூறினார்.
கொசஸ்தலை ஆற்றில் பல நிறுவனத்தின் கழிவுகள் கலப்பத்தால் மீன்கள் செத்து மிதக்கின்றது. சுற்றுச்சூழல் பாதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் அமைத்து கடும் நடவடிக்கை தேவை என்றார்.
சென்னை மற்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகள் வாழ்வாதாரம் மட்டுமல்ல பல உயிர்களுக்கும் தேவையான ஒன்று. சென்னையின் சுற்றுவட்டார பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம். எண்ணூர் பகுதியில் தொடர் நடவடிக்கை இது நடக்கிறது, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆற்றில் மீன்கள் செத்து கிடந்தது தொடர்பாக 5 இடங்களில் ஆய்வு நடத்தினோம். ஆய்வு செய்ததில் 2 இடங்களில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது கண்டறியப்பட்டது. இறந்த மீன்களும் ஆய்வுக்காக மீன்வளத்துறைக்கு அனுப்பிவைப்பு, ஆய்வு முடிவுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகத்துவார பகுதியில் எந்த ரசாயனமும் இல்லை, கழிவு நீர் கலப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை. மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக ஆய்வு செய்து உண்மை கண்டறிவதற்கு 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே பா.ம.க. எம்எல்ஏ கூறுகையில், ரசாயனம் கலக்கவில்லை என அமைச்சர் சொல்கிறார். ஆனால் ரசாயனம் கலந்தால் தான் நீர் தரம் மாறும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் வலியுறுத்தினார்.