பா.ஜ.கவுடன் இணைந்து கூட்டணி அமைத்தார் ச.ம.க தலைவர் சரத்குமார்

நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் செயல்பட முடிவு.மற்ற விபரங்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கப்படும்.
பா.ஜ.கவுடன் இணைந்து கூட்டணி அமைத்தார் ச.ம.க தலைவர் சரத்குமார்
Published on

பாராளுமன்ற தேர்தலில் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக முக்கிய கட்சிகளில் கூட்டணி அமைத்து வருகிறது.

அந்த வகையில், அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து, மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜனா, தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சரத்குமாரை சந்தித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில், நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செய்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மற்ற விபரங்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கப்படும் எனவும் சரத்குமார் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com