த.வெ.க. அமைச்சரவையில் பா.ம.க. இடம்பெறுமா?- சவுமியா அன்புமணி பதில்

உலக நகரங்கள் தினம் 2026 நிகழ்வில் தொகுப்பாளரும் என்னை அமைச்சர் என்றார், அதை திருத்தினேன் என்றார்.
சவுமியா அன்புமணி
Published on: 
Summary

தமிழ்நாடு அமைச்சரவையில் பா.ம.க. பங்கேற்கும் சூழல் இல்லை. தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய இடத்தில் இருப்போம் என சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் பா.ம.க. இடம்பெறும் என்றும் சவுமியா அன்புமணி அமைச்சராக உள்ளதாகவும் சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. இது குறித்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, பா.ம.க. இடம்பெறும் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என காரசார விவாதம் நடைபெற்றது.

ஆலோசனை

இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பங்கேற்று இருந்தார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சவுமியாவிடம், தமிழ்நாடு அமைச்சரவையில் பா.ம.க. இடம்பெறுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சவுமியா அன்புமணி பதில் கூறுகையில்,

தமிழ்நாடு அமைச்சரவையில் பா.ம.க. பங்கேற்கும் சூழல் இல்லை. தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய இடத்தில் இருப்போம். உலக நகரங்கள் தினம் 2026 நிகழ்வில் தொகுப்பாளரும் என்னை அமைச்சர் என்றார், அதை திருத்தினேன் என்றார்.

X