விஜய் பிரதமர் வேட்பாளரா?.. டி.கே. சிவகுமார் சொன்ன பதில்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வரவேண்டும் என்று சட்டசபையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டி.கே. சிவகுமார்
டி.கே. சிவகுமார்
Published on

சென்னை அருகே கோவளம் தனியார் ஓட்டலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது.

இதில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதலமைச்சர் விடி சதீசன், தெலுங்கானா சார்பில் துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா, புதுச்சேரி சார்பில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாடு நிறைவடைந்தபின் கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமார் ராஜிவ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

விஜய் பிரதமரா?

அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய் தற்போது முதலமைச்சராக உள்ள நிலையில் அவரை பிரதமர் வேட்பாளராக சிலர் முன்னிறுத்துவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ? எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த சிவகுமார், 'அது எனக்கு தெரியாது. நான் எது பற்றியும் பேச விரும்பவில்லை. அரசியல்வாதிகள் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவதற்கு பதில் நாட்டை கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தென்னிந்திய முதலமைச்சர்கள் மீட்டிங்கில் முக்கிய விஷயம் பேசப்பட்டது. 1971 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்'' என்று கூறி நழுவினார்.

முன்னதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வரவேண்டும் என்று சட்டசபையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com