

கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்பட போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் போதை பொருளை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. போலீசார் உடன் வனத்துறையினரும் இணைந்து வாகனங்களை தீவிரமாக கண்காணிப்பு வருகின்றனர். கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் வாகனங்கள், சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.
பண்ணாரி சோதனை சாவடிக்கு வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பிறகு செல்கிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் போலீசார் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் போலீசார் பண்ணாரி சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக டாட்டா ஏசி சரக்கு வாகனம் ஒன்று வந்தது அந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். வானத்துக்குள் காய்கறி மூட்டைகள் அதிகளவில் இருந்தன. மூட்டைகள் ஒவ்வொன்றையும் தள்ளி சோதனை செய்தபோது மூட்டைக்குள் நடுப்பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாதிக்கு கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
சுமார் 110 கிலோ ஹான்ஸ், குட்கா போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து சரக்கு வாகனத்தில் வந்த இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் பூபதி, பழனிச்சாமி என தெரியவந்தது இதனை அடுத்து சரக்கு வாகனத்துடன் போலீசார் அவர்களை விசாரணைக்காக சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் இருந்து கோவை மாவட்டத்திற்கு ஹான்ஸ் குட்கா கொண்டு செல்லப்பட்ட போது பிடிபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் பிடிப்பட்ட 110 கிலோ ஹான்ஸ், குட்கா மதிப்பு ரூ 65 ஆயிரத்துக்கு மேலிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.