சிவகங்கை அருகே ஓட, ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை

மஞ்சுவிரட்டுக்கு காளையை அழைத்துச் சென்றபோது ஓட, ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை அருகே ஓட, ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை
Published on: 
Summary

சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

14 வழக்குகளில் தொடர்பு

சிவகங்கையை அடுத்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதன் (வயது 26). இவர் மீது கொலை வழக்கு உள்பட 14 வழக்குகள் உள்ளதாகவும், இவர் ரவுடியாக வலம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு இவர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான சூர்யா (24), சுபாஷ் (23) ஆகியோரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இவர் ஏற்கனவே 2 முறை சிவகங்கை பகுதியில் நடந்த கொலை முயற்சியில் தப்பியதாக கூறப்படுகிறது.

வடமாடு மஞ்சுவிரட்டு

இந்த நிலையில் நேற்று சிவகங்கையை அடுத்த ஒக்கூர் மேலமங்கலத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மதன் தனது காளையை அழைத்து சென்றார். இதையடுத்து நேற்று மதியம் ஒரு மணி அளவில் மேலமங்கலத்தில் உள்ள பள்ளிக்கூடம் அருகே தனது காளையுடன் நின்று கொண்டிருக்கிறார்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் கும்பலாக பயங்கர ஆயுதங்களுடன் சிலர் வந்தனர். உடனே மதன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை ஓட, ஓட விரட்டிச்சென்றனர்.

வெட்டிக்கொலை

அங்குள்ள கரும்பு தோட்டத்தை நோக்கி ஓடிய நிலையில், சுற்றி வளைத்த அந்த கும்பல் வாள், அரிவாளால் சரமாரியாக மதனை வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் தப்பிச்சென்றனர்.

இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, சிவகங்கை துணை சூப்பிரண்டு அமலஅட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார்

மதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் லைலா அழைத்து வரப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. நிபுணர்கள் தடயங்களை பதிவுசெய்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com