SIR அனைத்துக்கட்சி கூட்டம்: த.வெ.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
SIR All party meeting
Published on: 
Summary

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூட்டத்திற்கு வந்ததும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று த.வெ.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் வலியுறுத்தின.

2027-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்

இது தொடர்பாக இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்க தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., வி.சி.க., நாம் தமிழர் உள்ளிட்ட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் நிர்மல் குமார்

இதில் பகுஜன் சமாஜ் தவிர 12 கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டன. த.வெ.க. சார்பில் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார், தி.மு.க. சார்பாக ஆஸ்டின் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ராஜ்யசபா எம்.பி. தனபால், பா.ஜ.க. கராத்தே தியாகராஜன், கே.எஸ். ராதாகிருஷ்ணன், வி.சி.க. எஸ்.எஸ். பாலாஜி குணவளகன், தே.மு.தி.க. பார்த்தசாரதி, ஜனார்த்தனன், ஆம் ஆத்மி வசீகரன், ஜோசப்ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆறுமுகம் நயினார், குணசேகரன் கலந்து கொண்டனர்.

9 கட்சிகள் வெளிநடப்பு

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூட்டத்திற்கு வந்ததும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று த.வெ.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் வலியுறுத்தின. ஞானேஷ்குமார் பதவி விலகாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொண்டால் சரியாக அமையாது என்றனர்.

இதை தொடர்ந்து 9 கட்சிகளும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க., பா.ஜ.க., தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com