

மாடம்பாக்கம் ஊராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
படப்பை அடுத்த வண்டலூர் வாலாஜாபாத் சாலை வைப்பூர் காரணித்தாங்கல் பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் வெளியேறி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தேங்கி உள்ளது.
இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம வீசி சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர். இதேபோல் மாடம்பாக்கம் ஊராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மாடம்பாக்கம் ஊராட்சி வள்ளலார் நகர் பகுதியில் உள்ள மழை நீர் வடி கால்வாயில் குப்பை கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு உள்ளன.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.