அமைச்சர் உதயநிதியை சந்தித்த செந்தில் பாலாஜி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, செந்தில் பாலாஜி சந்தித்தார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் உதயநிதியை சந்தித்த செந்தில் பாலாஜி
Published on

ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.

சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, செந்தில் பாலாஜி சந்தித்தார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com