செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர் - டாஸ்மாக் முறைகேடு பற்றி விசாரணை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.
senthil balaji
Published on

லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர் ஆனார்.

டாஸ்மாக் முறைகேடு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி சோதனையும் நடைபெற்றது.

செந்தில்பாலாஜி

இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை 11 மணியளவில் ஆஜர் ஆனார்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன. சென்னையில் ஆழ்வார் பேட்டையில் தங்கியிருந்த செந்தில்பாலாஜியிடமும் அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்குவதில் மதுபானங்களை கொள்முதல் செய்தல், மதுபானங்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தங்களை மேற்கொண்டது ஆகியவற்றின் முறைகேடு நடந்திருப்பதாக கூறியே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று ஆஜர் ஆன செந்தில்பாலாஜியிடம் அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com