

பொதுமக்கள் கூறுகையில் சென்னம்பட்டி வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று புகுந்து ஆடு மாடுகளை வேட்டையாடி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிட்டம்பட்டியைச் சேர்ந்த அர்த்தனாரி என்பவரின் மாட்டு கன்று குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்றது.
சென்னம்பட்டி அடுத்த கொமராயனூர் பச்சபாலி என்ற ஊரைச் சேர்ந்தவர் செந்தில் அவரது ஆட்டுக்கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 3 வெள்ளாடுகளை நேற்று இரவு சிறுத்தை புலி கடித்து கொன்றுள்ளது.
சிறுத்தையின் அட்டகாசம் குறித்து ஏற்கனவே சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இப்பகுதியில் இன்னும் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி இன்று காலை 7.15 மணியளவில் சென்னம்பட்டி-கொளத்தூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில் சென்னம்பட்டி வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று புகுந்து ஆடு மாடுகளை வேட்டையாடி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிட்டம்பட்டியைச் சேர்ந்த அர்த்தனாரி என்பவரின் மாட்டு கன்று குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்றது.
அதேபோல் மசக்கவுண்டனூரில் சித்தன் என்பவரது ஆட்டையும் கடித்துக் கொன்றது. இதனால் வனத்துறையினர் மசக்கவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளி அருகே ஒரு கூண்டு வைத்தனர். ஆனால் இதுவரை அந்த சிறுத்தை பிடிபடவில்லை. தற்போது கொமராயனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சிறுத்தைக்குடியின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்களுக்கு கால்நடைகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
இதுகுறித்து ஏற்கனவே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இப்பகுதியில் சிறுத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக நான்கைந்து கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார், வனத்துறையினர் மற்றும் அந்தியூர் தாசில்தார், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்ததை நடத்தினர். இந்த பேச்சுவர்த்தை காலை 10 மணி வரை நீடித்தது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் போலீசாரும் வனத்துறையினரும் தெரிவித்த பின் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.