செங்குன்றத்தில் ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றத்தில் ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on: 
Summary

புதிதாக கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருக்கும் பக்கத்து வீட்டின் சுவர் வழியாக ஏறி குதித்து மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்தது பதிவாகி உள்ளது.

செங்குன்றம், ஆர்.ஜி.என். காலனி, பெரியார் தெருவை சேர்ந்தவர் இமானுவேல். பாடியநல்லூரில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோசப் பின் நிர்மலாவும் செங்குன்றம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

கொள்ளை

கணவன்-மனைவி இருவரும் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் இரவு திரும்பி வந்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 37 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

செங்குன்றம் போலீஸ்

இதுகுறித்து செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருக்கும் பக்கத்து வீட்டின் சுவர் வழியாக ஏறி குதித்து மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்தது பதிவாகி உள்ளது.

இதனை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X