

த.வெ.க. கூட்டணியின் பெயரில் மட்டும்தான் மதச்சார்பின்மை உள்ளதாக முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
த.வெ.க. தலைமையில் உருவாகி இருக்கும் புதிய கூட்டணி பற்றி தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் பெயரில் மட்டுமே மதச் சார்பின்மை, செயல்பாட்டில் முழுக்க குழப்பம். புதுச்சேரி மற்றும் தமிழ் நாட்டிற்கான இடைத் தேர்தலை முன்னிட்டு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று ஒரு கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், ஐ.யு.எம்.எல். போன்ற கட்சிகளை கூட்ட ணியில் வைத்துக்கொண்டு, இதை எப்படி ‘மதச்சார்பற்ற கூட்டணி’ என்று அழைக்க முடியும்? மதச்சார்பின்மை என்பது பெயரில் வைத்துக் கொள்ளும் அடையாள மல்ல.
அனைத்து மதங்களையும் சமமாக அணுகும் கொள்கையாக இருக்க வேண்டும். கொள்கையில் குழப்பம், கூட்டணியில் குழப்பம், பிரதமர் வேட்பாளரில் குழப்பம், மாநில உரிமையில் தோல்வி- ஒட்டுமொத்த மாக இது ஒரு ‘குழப்பமான கூட்டணி’. எனவே, இதை ‘மனிதா பிமானமற்ற, சமூகநீதியற்ற, கொள்கையற்ற குழப்பக் கூட்டணி’ என்றுதான் மக்கள் பார்ப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.