சிவகங்கையில் 12 நாட்களுக்கு 163 தடை உத்தரவு அமல்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது.
சிவகங்கையில் 12 நாட்களுக்கு 163 தடை உத்தரவு அமல்
Published on: 
Summary

பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் 31-ந்தேதி வரை 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகிற 24-ந்தேதி மாமன்னர் மருதுபாண்டியரின் நினைவு தின நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற உள்ளது. மேலும் வருகிற 27-ந்தேதி காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ராமநாதபுரம்

இதைத்தொடர்ந்து வருகிற 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள்.

கலெக்டர்

இதை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் 31-ந்தேதி வரை பி.என்.எஸ்.எஸ். தடைச்சட்டம் 163 (1) கீழ் (பழைய சட்டப்படி 144) தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com