

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் கோவில் நிலத்தில் மண் கடத்தப்படுவதாக பொன்னேரி வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
ஆந்திர மாநிலத்திலிருந்து கண்டெய்னர் லாரிகள் மூலமாகத் தமிழகத்திற்குள் மணல் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு பறக்கும் படையினர் கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் தீவிர வாகனத்தணிக்கை மற்றும் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை நோக்கி வந்த ஒரு கண்டெய்னர் லாரியை அதிகாரிகள் நிறுத்தினார். அதிகாரிகளைக் கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கண்டெய்னரின் மேற் பகுதியைத் திறந்து சோதனையிட்டபோது அதில் மணல் உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதேபோல் மற்றொரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதிலும் மணல் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. அந்த லாரியில் இருந்த டிரைவரும் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. சினிமா பாணியில் கண்டெய்னர் லாரிகளில் மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தல் மணலுடன் 2 கண்டெய்னர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு கவரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தி வந்த லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணியில் சட்டவிரோதமாக மலை மண் எடுத்து செல்வதாக திருத்தணி வட்டாட்சியர் செந்தில் குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து திருத்தணி வட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் வருவாய் அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி மணல் கடத்திய 4 லாரிகள், டிராக்டர் மற்றும் ஜேசிபி எந்திரத்தை பறிமுதல் செய்து திருத்தணி போலீசில் ஒப்படைத்தனர்.
பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் கோவில் நிலத்தில் மண் கடத்தப்படுவதாக பொன்னேரி வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் ஜெயகர்பிரபு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது கக்கியாத்தம்மன் கோவில் நிலத்தில் மணல் கடத்தலுக்கு பயன் படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து சோழவரம் போலீசில் ஒப்படைத்தார்.