சேலத்தில் தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் ரொக்கம் - ரூ.50 லட்சம் கார் மோசடி

குறைந்த வட்டியில் பல கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் முன்பணம் பெற்று உள்ளார்.
சேலத்தில் தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் ரொக்கம் - ரூ.50 லட்சம் கார் மோசடி
Published on: 
Summary

அருண் செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் செல்வகணேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் தெருவை சேர்ந்தவர் அருண் (45). தொழில் அதிபரான இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பட்டியை சேர்ந்த செல்வகணஷே் என்பவர் கடன் பெற்று தருவதாக கூறி அறிமுகம் ஆகி உள்ளார்.

பின்னர் குறைந்த வட்டியில் பல கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் முன்பணம் பெற்று உள்ளார். மேலும் அவரிடம் விலை உயர்ந்த காரை விலைக்கு வாங்குவதாக கூறி ரூ. 1 லட்சம் கொடுத்து விட்டு ரூ.50 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை எடுத்து சென்றுள்ளார்.

கொலை மிரட்டல்

இதையடுத்து கடன் வாங்கி கொடுக்குமாறும், காருக்கான மீதி பணத்தையும் கொடுக்குமாறும் அருண் பல முறை கேட்டுள்ளார். ஆனால் அதனை திருப்பி கொடுக்காத செல்வ கணேஷ், அருணுக்கு கொலை மிரட்டல் விடுத்து உஉள்ளார்.

இது குறித்து அருண் செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் செல்வகணேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com