

கடத்தி வந்தது யார்? எங்கிருந்து, யாருக்காக கடத்தி வரப்பட்டது? என்பது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் வழியாக ரெயில்களில் கடத்தி செல்லப்படும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை ரெயில்வே போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அதன் ெதாடர்ச்சியாக செகந்திராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சேலம் வழியாக இன்று காலை சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போைத பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் விஜயகுமார் மற்றும் பிரபாகரன் ஆகியோர் சோதனை செய்தனர்.
அப்போது ரெயிலில் பின்புறம் உள்ள முன் பதிவில்லாத பெட்டியில் லக்கேஜ் போடும் இடத்தில் கேட்பாரற்று கிடந்த டிராலிபேக்கை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் 14 கிலோ கஞ்சா இருந்தது. மேலும் அதே பகுதியில் கிடந்த மற்றொரு ேதாள் பையில் 13 கிலோ குட்காவும் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் சேலம் ஜங்சன் ரெயில்ேவ போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் அதனை கடத்தி வந்தது யார்? எங்கிருந்து, யாருக்காக கடத்தி வரப்பட்டது? என்பது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.