சேலம் மாவட்டத்தில் மழை- தம்மம்பட்டியில் அதிக பட்சமாக 60 மி.மீ. பதிவு

சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை பெய்ததால் சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
rain
கோப்புபடம். 
Published on
Summary

சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை பெய்ததால் சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏரிகுளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கன மழை கொட்டியது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது.

வெள்ள காடான சாலைகள்

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை பெய்ததால் சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏரிகுளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

191 மி.மீ. மழை

மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 0.9, ஏற்காடு 5.4, வாழப்பாடி 2.4, ஆனைமடுவு 11, ஆத்தூர் 56, கெங்கவல்லி 15, ஏத்தாப்பூர் 14, கரியகோவில் 1, வீரகனூர் 4, எடப்பாடி 1.4, மேட்டூர் 6.8, ஓமலூர் 8, டேனீஷ்பேட்டை 5.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 191.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com