இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.47% நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன. மீதமுள்ள ₹5,451 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் திரும்ப வராமல் உள்ளன,
உங்களிடம் இன்னும் ₹2,000 நோட்டுகள் இருந்தால், கவலைப்படத் தேவையில்லை. இந்த நோட்டுகள் இன்னமும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெளிவாகக் கூறியுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்களின் ₹2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்கு ஆர்பிஐ இரு வழிகளை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் மோடியின் நண்பர்களான முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற அதிகாரப்பூர்வமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. என்று சிபிஎம் தலைவர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
2016 ஆம் ஆண்டு ஒருநாள் இரவு கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து பொதுமக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் மோடி. பிறகு 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வெளியிட்டனர். இதனால் கருப்பு பணம் மேலும் அதிகரித்தது. பிறகு 2023 ஏப்ரல் 30 க்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்று காலக்கெடு வைத்தனர்.
இப்போது 2000 ரூபாய் நோட்டுகளில் 5451 கோடி ரூபாய் திரும்ப வரவில்லை என்று மீண்டும் அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் நண்பர்களான முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற அதிகாரப்பூர்வமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
என்று தெரிவித்துள்ளார்.