வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி

கார்த்திகேயன் பணத்தை கேட்ட போது அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி
Published on: 
Summary

பணத்தை வாங்கி கொண்ட அவர்கள் பணத்தை திருப்பி தராமலும், வேலை வாங்கி தராமலும் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (வயது 57).

ரூ.16 லட்சம்

இவர் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு செல்வதற்காக திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகள் யுவஸ்ரீ, செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி அகிலா மற்றொரு மகள் லோகேஸ்வரி ஆகியோரிடம் ரூ.16 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பணத்தை வாங்கி கொண்ட அவர்கள் பணத்தை திருப்பி தராமலும், வேலை வாங்கி தராமலும் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

வழக்குபதிவு

இதனைத் தொடர்ந்து, கார்த்திகேயன் பணத்தை கேட்ட போது அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் தாய், தந்தை, மகள்கள் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X