கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலக வங்கி கணக்கை ‘ஹேக்’ செய்து ரூ.11 லட்சம் மோசடி

அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் வங்கியின் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை மீறி சில அலுவலர்கள் உதவியுடன் பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது.
கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலக வங்கி கணக்கை ‘ஹேக்’ செய்து ரூ.11 லட்சம் மோசடி
Published on: 
Summary

சைபர் கிரைம் போலீஸ் துறையினர், பண பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் ஐ.பி. முகவரிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்–டம், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கீழையூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தனியாக அரசின் அதிகாரப் பூர்வ வங்கி கணக்கு உள்ளது.

அரசு வங்கி கணக்கு ‘ஹேக்’

இந்த வங்கி கணக்கில் இருந்து பல்வேறு பணி–களுக்கு செலவு செய்வதற்–காக நிதி ஒதுக்கீடு செய்யப்–படும். இவ்வாறு கணக்கை கேரளா மாநிலத்தை சேர்ந்த மர்ம கும்பல் ‘ஹேக்’ செய்து அதில் இருந்து ரூ.11 லட்–சத்தை மோசடி செய்து உள்ளது.

சில அலுவலர்கள் உதவியுடன்...

இது குறித்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் சென்னை வேப்பேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்–தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் வங்கியின் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை மீறி சில அலுவலர்கள் உதவியுடன் பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது.

சைபர் கிரைம் போலீஸ் துறையினர், பண பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் ஐ.பி. முகவரிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘இரும்புத்திரை’

‘இரும்புத்திரை’ திரைப்பட பாணியில் அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அரசு அலு–வலக வங்கி கணக்கையே ‘ஹேக்’ செய்து பணத்தை சுருட்டிய சம்பவம் அரசு வட்டாரத்தில் கடும் அதிர்ச்–சியை ஏற்படுத்தி உள்ளது.

X